சிவமே தவம். தவமே சிவம். திருச்சிற்றம்பலம் முப்பொழுதும் நற்றுணையாவது நம சிவாயமே. அருள்மிகு ஞானாம்பிகை வேதபுரீஸ்வரர் தேவஸ்தான திருக்கோவிலின் தல வரலாறு.

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. தமிழ்நாடு வேலூர் மாவட்டம் அழிஞ்சிகுப்பம் மதுரா ரெட்டி மாங்குப்பம் கைகள் ஆற்றின் கரையோரத்தில் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு இருந்தே தமது முன்னோர்கள் தற்போது திருக்கோயில் இருக்குமிடத்தில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி வருடத்திற்கு ஒரு முறை அருள்மிகு சாமுண்டி அம்மனுக்கு திருவிழா நடத்துவார்கள்.

அப்போது அருகிலுள்ள குறிப்பிட்ட இடத்தில் திரு மஞ்சள் நீர் தெளித்து பிறநவம் வரைந்து பம்பை, மேளம், முழங்க, முதலில் சிவ பூஜை செய்தபிறகு அம்மனை வழிபட சென்றுவிடுவார்கள்.

 

காலகாலமாக விழா நடைபெற்று வந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு சிவ பூஜை செய்யும் இடத்தில் மணல் மேடாக காணப்பட்டதால் அவ்விடத்தை சுப்பிரமணி, பவுனம்மாள் குடும்பத்தினர் சமன் செய்து வரும் நிலையில் சுமார் 8 அடி ஆழத்தைக் கடந்தபின் உட்புறமாக புற்று காணப்பட்டது.

அதை சரி செய்யும் பொழுது புற்றுக்குள் இருந்த நாகத்தின் மேல் ஆயுதம் தவறுதலாக பட்டுவிட புற்றுக்குள் இருந்த நாகம் படமெடுத்து சீறிப்பாய்ந்து ஓசை எழுப்பியது. பின்னர் நான்கு திசைகளையும் திரும்பி திரும்பி பார்த்து பூமியை நோக்கி மூன்று முறை கொத்தி அதன் உயிர் பிரிந்தது.

பின்னர் அதற்கு செய்யவேண்டிய ஈம கிரியை மரியாதையுடனும், பயபக்தியுடனும், செய்து அப்புறப்படுத்தப்பட்டது. அன்று இரவு வழக்கம்போல் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் லட்சுமி சமேதரனாகிய எனக்கு அசரீரியாக குரல் கேட்டது.

மகனே நான் நாக தேவதை பல வருடங்களாக அந்த இடத்தில் தவம் செய்து வருகின்றேன். இனி நான் பக்தர்கள் குறைகளை நீக்கி சுகம் அளிப்பேன் என்று கூறி இவ்விடத்தில் தலவிருட்சமாக வேம்பு மரம் வளரும் ,அதை வணங்கி பூஜை செய்து வா என்று கூறி மறைந்தது.

தொடர்ந்து பூஜை புனஸ்காரங்கள் ஆத்மார்த்தமாக செய்து வந்தோம் 2003 ஆம் ஆண்டு அந்த இடத்தில் பொங்கல் வைத்து விழா செய்து வந்த வேளையில் திடீரென 9 சுமங்கலி பெண்கள் மீது சாமி ஆடி இங்கு சூளம் நட வேண்டும், என்று கூறி சுமார் 10 அடி தொலைவில் சென்ற சுமங்கலிப்பெண்கள் ஒன்பது பேரும் குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்டச் சொன்னார்கள்.

அவ்விடத்தில் ஒருகல் தென்பட்டது, அதை அருள் வந்து ஆடி இதை வைத்து இங்கு சிவபூஜை செய்ய வேண்டும். சி

வனையும், எங்களையும் வணங்கினால் ஆயுள், ஆரோக்கியம், மாங்கல்யம் ,புத்திர பாக்கியம் ,அளித்து அருள்பாலித்து காப்போம் என்று கூறினர். அவர்கள் காவல் தெய்வமாக காத்து வருகின்றனர்.

அன்று முதல் ஒன்றுகூடி ஆலயம் அமைத்து சிவ பூஜைகள் செய்து வந்த நிலையில் இப்பொழுது அவ்விடத்தில் அருள்மிகு ஞானாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

சிவனடியார்களை வணங்குகிறோம். சிந்தையில் ஈசனை நினைத்து. இவ்வாலயம் இயற்கை சூழலில் பரந்து விரிந்து கேட்பவர்க்கு கேட்ட வரம் அளித்து சாந்த சொரூருபிணியாகவும், கம்பீரமாக காட்சியளித்து வருகிறார் ஞானாம்பிகை வேதபுரீஸ்வரர்.

வேதபுரீஸ்வரர் என்றாலே வேதங்களை பாதுகாப்பவர். தேவர்களும் ,ரிஷிகளும் ,சித்தர்களும், மகா யோகிகளும், ஆனந்தமாய் அருள்பாலித்து வரும் இத்திருக்கோயில் சூரிய பகவானை நோக்கி கிழக்குமுகமாக அமைந்துள்ளது இதன் சிறப்பு .

நவகோள்கள் மகிழ்ந்து நன்மை அளித்திட திருக்கோயிலின் நந்தவனத்தில் இயற்கை பிரபஞ்ச அன்னை அருளாசியுடன் தெய்வீக மூலிகை மரங்கள், செடிகள், கொடிகள், என வானத்தை பார்த்து நன்றி கூறி பக்தர்களையும் அடியார்களையும் வரவேற்கின்றன. நீங்களும் வந்து தான் பாருங்களேன்.

நமச்சிவாய என்றாலே முக்தி கிடைக்கும் இத்திருத்தலத்தில். முக்கனியான மா பலா வாழை ,ருத்திரன் கண்களிலிருந்து வந்த ருத்ராட்சை மரமும், வில்வமும், மகாவில்வம், இங்கே ஈசனை தாலாட்டி வருகிறது. தலவிருட்சமான பனை அத்தி ஆல் என்று சொல்லப்படும் தெய்வீக மூலிகை மரங்களும் பறந்து விரிந்து வளர்ந்திருப்பது கண் கொள்ளா காட்சி.

அம்மன் மீது அமர்ந்து அருளாட்சி அளிக்கும் வேம்பு மரம் பக்தர்களை ஆட்கொள்கிறது ..ஓம் நமச்சிவாய. இங்கு மூலவரே வேதபுரீஸ்வரர் வேத நாகம்மன் ஞானாம்பிகை உடன் ஆனந்தமாக ரம்மியமாய் காட்சியளிக்கின்றார்.

முதற்கடவுளான விநாயகப் பெருமானும்,தம்பி பாலமுருகன் சிரித்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இவர்களுடன் சித்தர்கள் எனப்படும் திருமூலரும், போகரும் பலிபீடத்தை பார்த்தவாறு வடக்கு நோக்கி அமர்ந்து காட்சியளித்து வருகிறார்.

காலை மாலை என இருவேளை பூஜைகளும் புனஸ்காரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பவுர்ணமி தினத்தன்று யாக வேள்விகளும், பூஜைகளும், பஜனையும் வாத்தியக் கருவிகளுடன் பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. பிரதோஷ காலங்களிலும் ,அஷ்டமி, சிவராத்திரி ,நாட்களில் பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

கழுத்தில் அணியும் ருத்ராட்சத்திற்கு எவ்வளவு சிறப்பானது சிவபெருமானே நம்மோடு இருக்கிறார் என்ற எண்ணம் நம் சிந்தையில் மேலோங்கிஇருக்கும் நிலையில் அந்த ருத்ராட்ச மரம் இத்திருக்கோவில் நந்த வனத்தில் திருத்தேர் போல ஆடி அசைந்து அடியார்களையும் பக்தர்களையும் வரை வரவேற்பதை நாம் கண்டு வணங்குவோம் வாருங்கள்.

வந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றுச் செல்லுங்கள் ஆனந்த நல்வாழ்வு வாழ அழைக்கிறேன். சர்வத்தையும் படைத்த சிற்றம்பல நாதன் திருச்சிற்றம்பலம். அவனருளாலே

இங்கனம்.

அடியேன் லட்சுமி சமேதரன்

புகைப்படங்கள்