You are currently viewing அருள்மிகு ஞானாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ருத்ராட்ச தல விருட்சம்

அருள்மிகு ஞானாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ருத்ராட்ச தல விருட்சம்

அருள்மிகு ஞானாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ருத்ராட்ச தல விருட்சம்

வாழ்க நலமுடன். சிவமே பயம்! பயமே ஜெயம்! எல்லாம் வல்ல இறைவன் சிவபெருமான் துணை கொண்டு ஆன்மீக பக்தர்களையும் சிவனடியார்களையும் வணங்கி வேண்டுகிறேன்.

சிவபெருமான் என்றாலே ருத்ராட்சம் நினைவிற்கு வரும். அப்படிப்பட்ட ருத்ராட்சம் நமது தமிழ்நாட்டில் காண்பது அறிது.  அப்படி இருக்க வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுக்கா, ரெட்டி மாங் குப்பம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஞானாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் ருத்ராட்ச தல விருட்சம் அமைந்திருப்பதால் ஈசன் அருளும் ருத்ராட்சத்தின் திறனும் நமக்கு சேர்ந்தபடி கிடைக்கிறது.

ஆன்மீக அடியார்களும் பக்தர்களும் தரிசனம் செய்து இறையருளை பெற்று வாழ்வில் நலமும் வளமும் கிடைக்கப் பெற்று வாழ அழைக்கிறோம்.

வாழ்க நலமுடன் இந்தப் பதிவை ஆன்மீக அடியார்களுக்கு பதினோரு பேருக்கு அனுப்பி இறைத் தொண்டில் தங்களது பணி சிறக்கட்டும் வாழ்க நலமுடன்

இவ்வாலயத்தில் நவ கிரகங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கும் உடல் பிணிகளுக்கும் வேண்டுதல் வைத்து செல்வார்கள்.

உடல் நலம் பெற்ற பிறகு வேண்டுதலை வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்த ஆலயத்தில் மூலவர் வேதபுரீஸ்வரர்க்கும் உமையம்மை ஞானாம்பிகை தாயாருக்கும் தினம் தினம் வண்ண ஆடைகள் அலங்காரம் செய்யப்படும்.

  • ஞாயிற்றுக்கிழமை சிவப்பு வஸ்திரம்,
  • திங்கட்கிழமை வெண்மை நிற வஸ்திரமும்,
  • செவ்வாய்க்கிழமை காவி வஸ்திரமும்,
  • புதன்கிழமை பச்சை வஸ்திரமும்,
  • வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரமும்
  • வெள்ளிக்கிழமை வெண்பட்டாடை
  • சனிக்கிழமை நீல நிறமும்

இப்படி சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் பிரசாதமாக

  • ஞாயிற்றுக்கிழமை கோதுமையால் செய்யப்பட்டதையும்
  • திங்கட்கிழமை அரிசியால் செய்யப்பட்டவையும்
  • செவ்வாய்க்கிழமை துறையால் செய்யப்பட்டவையும்
  • புதன்கிழமை பாசிப் பயிரால் செய்யப்பட்டதையும்
  • வியாழக்கிழமை கொண்டகடலை செய்யப்பட்டவையும்
  • வெள்ளிக்கிழமை மொச்சை பருப்பு செய்யப்பட்டதையும்
  • சனிக்கிழமை கருப்பு எள் சாதம்
  • அமாவாசையன்று உளுந்து பயிறு செய்யப்பட்டவையும்
  • பவுர்ணமியன்று கொள்ளு பயிறு செய்யப்பட்டதையும்

நிவேத்யம் ஆகும்

Leave a Reply